வாவ்..செம க்யூட்! குக் வித் கோமாளி பவித்ரா சிறுவயதில் எம்புட்டு அழகா இருக்காங்க பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!!Cook with comali pavithra childhood photo viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்து பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. இவர் இதற்கு முன்பு உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும்  சில குறும்படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்துள்ளார். 

 ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. பவித்ரா ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் பட பூஜை விழா அண்மையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் இருமொழிகளில் உருவாகும் படமொன்றிலும் நடிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். பவித்ரா மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

pavithra

இந்த நிலையில் தற்போது பவித்ரா தனது அம்மாவுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் வாவ் செம க்யூட்டா இருக்கீங்க என கொஞ்சி தீர்த்து வருகின்றனர்.