சினிமா

பிரபல இயக்குனர் மீது பாலியல் புகார் அளித்த தனுஸ்ரீ தத்தா...!

Summary:

complaint-has-been-filed-by-Tanushree-Dutta

ஹிந்தி திரையுலகின் பிரபலமான நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் 2005-ம் ஆண்டு, ‘ஆசிக் பனாயா ஆப்னே’ என்ற இந்தி படத்தின் மூலம்  அறிமுகம் ஆனார். இவர் நடித்த படங்களில் பெரும்பாலான படங்களில் கவர்ச்சியாக தான் நடித்திருந்தார். அந்த வகையில் தமிழில் நடிகர் விஷாலுடன் சேர்ந்து ஒரு படம் பண்ணினார். "தீராத விளையாட்டு பிள்ளை" என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் புதிய படத்தில் இயக்குனர் என்னை ஆடை இல்லாமல் நடனம் ஆடு என்று கூறுவதாக புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம்  தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்தார்

இந்நிலையில் அவர் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி மீதும் தற்போது புகார் கூறியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்த குயின் படத்தில் நடித்தபொழுது அதன் இயக்குநரான விகாஸ் பாஹல் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என கங்கனா தெரிவித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு பாம்பே வெல்வெட் என்ற திரைப்படத்தின் விளம்பர சுற்றுலாவுக்காக சென்றபொழுது தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என இயக்குநர் விகாஸ் மீது பெண் ஒருவர் குற்றச்சாட்டு எழுப்பினார்.


Advertisement