நடிகர் யோகிபாபு மீது இப்படி ஒரு புகார்.! நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!complaaint on yogi babu

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் தனது காமெடியால் அசத்தி கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் தற்போது முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. இந்தநிலையில், தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சமீபத்தில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளனர். அதில், நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம், சமீபத்தில் வெளியானது. அந்தப் படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 

அந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பல காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

Yogi babu

இந்தநிலையில், தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் வியாசர்பாடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அந்த சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமீபத்தில் வெளிவந்த நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த படத்தில் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த மக்களை கீழ்த்தரமாக சித்தரித்துள்ளனர். எனவே இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நங்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.