சினிமா பிக்பாஸ்

லாஸ்லியாவின் பிரச்சனையை ஓவியா எப்படி கையாண்டுள்ளார் என்று பாருங்கள் - தீயாய் பரவும் வீடியோ.

Summary:

Comparison between Losliya and oviya video

பிக்பாஸ் சீசன் 3 இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. யார் அந்த பிக்பாஸ் பட்டத்தை வெல்லப் போகிறார்கள் என மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதனை அபிராமி, மோகன் வைத்யா, சாக்‌ஷி ஆகியோர் நடுவர்களாக இருந்து விருது வழங்கினர்.

அப்போது லாஸ்லியாவுக்கு பச்சோந்தி விருது வழங்க அதை அவர் ஏற்காமல் கீழே போட்டு சென்றதால் வீட்டில் சண்டை ஏற்பட்டது. கடைசியில் கடுமையான வாக்குவாதத்திற்கு பிறகு மீண்டும் விருது வழங்கப்பட்டது.

ஆனால் இதே போன்ற ஒரு நிகழ்வு பிக்பாஸ் சீசன் 1 ல் ஓவியாவுக்கு நடைபெற்றது. அப்போது அவரும் இது எனக்கு தகுதியான விருது கிடையாது என தன்மையாக கூறி வாங்காமல் சென்று விடுகிறார். தற்போது விடியோவாக அதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement