டிடிவி தினகரனை சந்தித்த காமெடி நடிகர் சதீஷ்! என்ன காரணம் தெரியுமா? - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம் சினிமா

டிடிவி தினகரனை சந்தித்த காமெடி நடிகர் சதீஷ்! என்ன காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சதீஷ். 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதிவியாளராக பணியாற்றியவர். இவர் முதன்முதலில் ஏ. எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.

 இதனையடுத்து மெரினா திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர், சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் நடித்தவர். மேலும் எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார்.

இவரது திருமணம் எப்போதும் நடக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில்,  சமீபத்தில் சிக்சர் படத்தின் இயக்குநர் சாச்சியின் தங்கைக்கும், சதீஸுக்கும் திருமண நிச்சயம் முடிந்தது.

இதனையடுத்து காமெடி நடிகர் சதீஸ் பல பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழை வைத்து வருகிறார். சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கும் திருமண அழைப்பிதழை வைத்த புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்தநிலையில் நடிகர் சதீஸ் டிடிவி தினகரனை சந்தித்து திருமண அழைப்பிதழை வைத்துள்ளார். அப்போது அவருடன் நடிகர் ஆடம்ஸ் உடன் சென்றுள்ளார். தற்போது அந்த புகைப்படங்களும் இணையத்தில் வரலாகி வருகிறது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo