நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
துக்க வீடுகளில் வியூஸ்-க்காக சில யூடியூப் சேனல்கள் செய்யும் தரம்கெட்ட செயல்.. உச்சகட்ட கோபத்தில் சினிமாத்துறை.!

யூடியூப், பேஸ்புக் போன்ற செயல்களின் பயன்பாடுகள் அதிகரித்ததால் இருந்து, அதன் வாயிலாக பலரும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மக்களுக்கு நடப்பதை கண்முன் கொண்டு செல்வதாக எண்ணி செயல்படும் சில யூடியூப் ஊடகங்களின் காரணமாக அவ்வப்போது பெரும் சர்ச்சையை ஏற்பட்டுவிடுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அங்கு அஞ்சலி செலுத்த வந்த பலரையும் யூடியூப் சேனல்கள் வீடியோ எடுத்து பதிவிட்டது.
இது சில சர்ச்சைக்குரிய விஷயங்களை ஏற்படுத்திய நிலையில், திரைத்துறையினரின் வீட்டில் இனி துக்க நிகழ்வில் ஊடகத்திற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்ற முடிவில் தமிழ் திரையுலகம் வந்துள்ளது.
இதனை திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கடுமையாக சாடியிருக்கும் நிலையில், ஆறுதல் சொல்ல இயலாமல் நிற்பவரை வீடியோ எடுத்து சங்கடத்தை பல யூடியூப் சேனல் ஏற்படுவதாகவும் கொதித்தெழுகின்றனர்.