சினிமா

கதிர் இப்படிப்பட்டவரா? வெளிப்படையாக பல உண்மைகளை போட்டுடைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

chitra talk about pandian store kumaran

இன்றைய காலத்தில் சீரியல்கள் என்பது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும். மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சீரியல்களுக்கு அடிமையாக உள்ளனர். இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்.

அண்ணன் தம்பி பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் அந்த தொடருக்கு என ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, குமரன் ஆகியோர் தங்கள் நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். மேலும் இவர்களில் கதிர், முல்லை ஜோடி ரசிகர்களிடையே பெரும் அளவில் ரீச் ஆனது.

தொடர்புடைய படம்

இந்நிலையில் கதிராக நடிக்கும் குமரனுக்கும், முல்லையாக நடிக்கும் சித்ராவிற்கு இடையே பிரச்சினைகள் இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் இதுகுறித்து சித்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, எனக்கும் குமரனுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. நான் எப்போதும் ஒரே மாதிரிதான் இருப்பேன். குமரனும் ஷூட்டிங்ஸ்பாட்டில் ஜாலியாக தான் இருப்பார். ஆனால் ஒரு சில சமயங்களில் அமைதியாக போனை பார்த்தபடியே இருந்து விடுவார். 

 நான் யாருடைய உதவியுமின்றி இந்த துறைக்கு வந்துள்ளேன். நான் பெரிய குறிக்கோளுடன் ஓடிகொண்டிருக்கிறேன். எனக்கு நெருங்கிய நண்பர்கள் என யாரும் இல்லை, என் கார் தான் எனக்கு நண்பன். அதனுடன்தான் பேசுவேன். ஏதாவது கஷ்டம் என்றால் அதனிடம் கூறிதான் அழுவேன். பிறகு என் மனசுக்கு ஆறுதலாக இருக்கும் என சித்ரா கூறியுள்ளார்.
 


Advertisement