சினிமா

இந்த சிறுமிகள் யார் தெரிகிறதா.? இருவருமே சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்த முன்னணி நடிகைகள்..!

Summary:

Childhood photos of keerthi suresh and kalyani priyadharsan

இந்த இரண்டு சிறுமிகளின் புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காரணம் இவர்கள் இருவருமே இப்போது ஹீரோயின்கள். அதுமட்டும் இல்லாமல் இவர்கள் இருவருமே நடிகர் சிவகாத்திகேயனுக்கு ஜோடியாகவும் நடித்தவர்கள்.

யார்னு தெரியுதா.? அவர்கள் வேறு யாரும் இல்லை. பிரபல நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் கல்யாணி ப்ரியதர்சன் தான் அது. சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன், ரெமோ போன்ற படங்களில் நடித்து, இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அதேபோல், கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார் நடிகை கல்யாணி ப்ரியதர்சன்.

கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர்கள் சிறுவயதில் இருந்தே தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement