
cheran daughter photo viral
தனது பிக்பாஸ் சீசன்மூன்று கமல்ஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்க 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்திற்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளநிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது இறுதிக்கட்ட போட்டியாளர்களாக லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், ஆகிய 5 போட்டியாளர்கள் மட்டுமே முழு மூச்சுடன் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து பிரபலமான இயக்குனர் சேரன். அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதல் தனது பணியை சிறப்பாக செய்து வந்தார். மேலும் இளைஞர்களுக்கு இணையாக தன்னால் முடிந்தவரை கடுமையாக போராடி வந்தார். இந்நிலையில் அவர் கடந்த வாரம் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் தனது படப்பிடிப்புக்காக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் தனது குடும்பத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளார். இந்நிலையில் அவர் தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement