பிரபலத்திடம் வீட்டை வாடகைக்கு விடுத்த நடிகர் செந்தில்! வீட்டை நேரில் சென்று பார்த்த செந்திலுக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்.

பிரபலத்திடம் வீட்டை வாடகைக்கு விடுத்த நடிகர் செந்தில்! வீட்டை நேரில் சென்று பார்த்த செந்திலுக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்.


செந்தில் chennai

தமிழ் சினிமாவில் 80 களிலிருந்து காமெடி நடிகராக பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் செந்தில். அதிலும் கவுண்டமணி, செந்தில் காமெடி யாராலும் மறக்க முடியாது. யாராலும் ரசிக்காமலும் இருக்க முடியாது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ராசாத்தி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இவர் தனக்கு சொந்தமான சாலிகிராம என்ற இடத்தில் உள்ள மிக பிரமாண்டமான வீட்டை சகாயராஜ் என்பவரிடம் கடந்த 2013 ஆம் ஆண்டு ₹2,00,000 வாடகைக்கு விட்டுள்ளார். அவரும் தொடர்ந்து வாடகை கொடுத்து வந்துள்ளார்.இந்நிலையில் தற்போது திடீரென கடந்த 6 மாதமாக வாடகை தராமல் வந்துள்ளார். 

Senthil

மேலும் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. உடனே சந்தேகமடைந்த செந்தில் வீட்டை நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது தான் செந்திலுக்கு உண்மை தெரிய வந்துள்ளது. அதாவது சகாயராஜ் அந்த 10 அறைகள் கொண்ட அந்த வீட்டை தனது சொந்த கட்டிடம் என கூறி அதில் 7 அறையை ரீஸ் மற்றும் வாடகைக்கு விடுத்துள்ளார்.

இதனை பார்த்ததும் நடிகர் செந்திலுக்கு அதிர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. உடனே அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் தலைமறைவான சகாயராஜை தேடி வருகின்றனர். சகாயராஜ் சினிமா துறையில் புரொடக்‌ஷன்ஸ் மேனேஜராக இருந்தவர் என்பது கூறிப்பிடத்தக்கது.