சினிமா

செக்க சிவந்த வானம் படத்தின் வீடியோ இன்று வெளியாகவுள்ளது...!

Summary:

ccv-videos-today-release

நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் வரவிருக்கும் திரைப்படம் தான் செக்க சிவந்த வானம். இந்த படத்தில் முக்கியமான காதாபாத்திரங்களில் நான்கு முன்னணி ஹீரோக்கள் நடித்துள்ளார்கள். இதில் 
சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படம் வருகிற 27ஆம் தேதி வெளியாக உள்ளது என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த படத்திற்கு நம்ம இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அனைவருக்கும் தெரிந்தது தான்.

இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடல், மழைக்குருவி என ஆரம்பிக்கும் பாடலின் ஒரு நிமிட வீடியோ இன்று மாலை  வெளியாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement