சினிமா

சத்தமில்லாமல் பாகுபலி படத்தின் சாதனையை வென்ற பிரபல நடிகரின் படம்...!

Summary:

breaks-the-record-of-baagubhali-movie

சத்தமில்லாமல் பாகுபலி படத்தின் சாதனையை வென்ற பிரபல நடிகரின் படம்...! 

கடந்த 2015 இல் பிரமாண்டமாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் "பாகுபலி". மீண்டும் இந்த படத்தில் தொடர்ச்சியாக  2017 ஆம் ஆண்டில் பாகுபலி 2 (Baahubali: The Conclusion), வெளிவந்து வரலாறு படைத்த திரைப்படம் ஆகும்.  இந்த படத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்கினார். ஆந்திராவின் அர்க்கா மீடியா வர்க்சு நிறுவனம் தயாரித்திருந்தது. இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இதில் ரம்யா கிருஷ்ணன், பிரபாஸ், ரானா தக்குபாடி, அனுஷ்க்கா, சத்தியராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த படம் வெளியிட்ட நாள் முதல் இன்றுவரை இந்த படம் செய்த சாதனையை வேறுபடங்கள் எதுவும் முறியடிக்கவில்லை. ஆனால்  தற்போது இந்த படத்தின் சாதனையை மிஞ்சியது பிரபல நடிகரின் புதிய திரைப்படம். 

அந்த வகையில் பாகுபலி படம் கேரளாவில்  1370 காட்சிகள் முதல் நாளில் ஓடியதாம். சமீபத்திய நாட்கள் வரை அது தான் முதலாவதாக இடம் பிடித்திருந்தது. தற்போது நடிகர் நிவின் பாலியின் காயங்களும் கொச்சுண்ணி படம் முந்தியுள்ளது. முதல் நாளே இப்படம் 1600 காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளதாம்.


Advertisement