தமிழகம் சினிமா

காதல் திருமணம் செய்த ஜோடி! சினிமா பாணியில் மாப்பிளைக்கு நேர்ந்த கதி!

Summary:

Boy murdered in thanjavur for love marriage

காதல் திருமணமும் அதனால் ஏற்படும் ஆணவ கொலைகளும் இன்றுவரை நடந்துகொண்டேதான் இருக்கின்றது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வாயில் துணியுடன் 19 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரணையில் இறங்கிய போலீசார், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணலூர் கிராமத்தை சேர்ந்த பிரசாத் என்ற இளைஞரை காணவில்லை என்று நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்று வந்திருந்தது. இந்நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது காணாம பிரசாந்த் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் இது குறித்த விசாரணையில் பிரசாந்த் அருகிலுள்ள இலுப்பூர் கோரையூரைச் சேர்ந்த இளம் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு ஓடிவந்த இளம் பெண் பிரசாந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின்னர், பிரசாந்த், அவரது காதலி, பிரசாந்தின் தாய் மூவரும் ஊரில் இருந்து கிளம்பி ஜெயங்கொண்டம் அருகே ஒரு கோவிலில் திருமணம் செய்துவிட்டு, சமயபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.

அதன்பின்னர் தனது திருமணம் குறித்து அந்த இளம் பெண் தனது தாய்க்கு போன் செய்து கூறியுள்ளார். முதலில் அவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பதுபோல் கூறி இருவரையும் ஊருக்கு அழைத்து சென்றுள்ளன்னர். அதன்பின்னர் பிரசாந்தை மட்டும் தனியே அழைத்து அவரது வாயில் துணி வைத்து அவரை அடித்து கொன்றுள்ளன்னர்.

சினிமா பாணியில் நடந்த இந்த சமப்வம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement