கொரோனா பீதி! ஏழு மருத்துவமனைகளுக்கு அலைந்து, பிரபல நடிகைக்கு நேர்ந்த அவலம்!bollywood-actress-not-allowed-in-hospital-for-corono-fe

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி வேடங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சம்பாவ்னா சேத். இவர் டிவி நடிகையாகவும்,  தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் இருந்து வந்துள்ளார். மேலும் இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2வது சீசனிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்குச் சென்ற அவரை கொரோனா பாதிப்பாக இருக்கலாம் என எண்ணி அங்கிருந்து விரட்டியுள்ளனர். 

இந்நிலையில் இதுகுறித்து சம்பாவ்னா கூறுகையில்,  எனக்கு பல வருஷமாக ஜலதோஷம் மற்றும் இருமல் பிரச்சனை உள்ளது.  இந்த பிரச்சனை ஏற்பட்டு குணமாக 20 நாட்கள் ஆகும். அதேபோல் சமீபத்தில் சளி பிரச்சினை ஏற்பட்டு, கடுமையான இருமலும் வந்தது. ஆனால் இந்தத்தடவை அது சரியாக அதிக நாட்கள் ஆனது. மேலும் எனது இரத்தஅழுத்தமும் குறைந்தது.  அதுமட்டுமின்றி எனது இடது காதின் வலியும் தாங்க முடியவில்லை.

Sampavla

 இந்த நிலையில்  மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால் கொரோனா பாதிப்பாக  இருக்கலாமென பயந்து மருத்துவமனையில் என்னை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

7 மருத்துவமனைகளுக்கு சென்றோம். ஆனால் அவர்கள் வாசலோடு திருப்பி அனுப்பிவிட்டனர். கடைசியாக ஒரு மருத்துவமனையில் என்னை சோதனை செய்துவிட்டு இஎன்டி மருத்துவரை பார்க்க சொன்னார்கள். பின்னர் மறுநாள்  மருத்துவரை பார்த்து சிகிச்சை பெற்றேன். காதில் ஏற்பட்ட தொற்று காரணமாகவே அந்த வலி ஏற்பட்டுள்ளது என அவர் கூறினார் என கூறியுள்ளார்.