"சகோதரி திருமணத்தில் கண்ணீர் சிந்திய நடிகை!" யார் தெரியுமா?

2016ஆம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளியான "தங்கல்" திரைப்படத்தில் அறிமுகமானவர் சன்யா மல்ஹோத்ரா. தொடர்ந்து பதாய் ஹோ, ஜவான் உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும் 2019 ஆம் ஆண்டு "போட்டோகிராப்", 2020 ஆம் ஆண்டு "லுடோ" என்ற பிளாக் காமெடி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். மேலும் லவ் ஹாஸ்டல், காதல் ஆகிய படங்களுக்காக பிலிம்பேர் ஓடிடி விருது இவருக்கு கிடைத்தது.
மேலும் இவர் தமிழ்ப்பெண்ணாக நடித்த "மீனாட்சி சுந்தரேஸ்வர்" என்ற படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இவருக்கு ஷாகுல் மல்ஹோத்ரா என்ற சகோதரி உள்ளார். சமீபத்தில் ஷாகுன் மல்ஹோத்ராவுக்கும், தயாரிப்பாளர் அச்சின் ஜெயினுக்கும் திருமணம் நடைபெற்றது.
அந்த திருமணத்தில் சன்யா மல்ஹோத்ரா கண்ணீர் சிந்திய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. "ஷாகுன் நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன்" என்று கேப்ஷனுடன் சகோதரியை டேக் செய்து சன்யா பதிவிட்டுள்ள புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.