நடிப்பதற்கு நிறம் அவசியமில்லை என்று நிரூபித்துக் காட்டிய கருப்பு கதாநாயகன்.!



BlackHerosDay

கடந்த 1970களில் தமிழ் சினிமாவிற்குள் ரஜினிகாந்த் நுழைவதற்கு முன்னர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஒவ்வொருவரும் நான் எம்.ஜிஆர் போல வர வேண்டும் என்றுதான் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் 1975 ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழ் சினிமாவிற்கு நுழைந்தவர்களின் பேச்சு வேறு விதமாக மாறத் தொடங்கியது. அதாவது, நடிப்புலக சக்கரவர்த்திகளாக திகழ்ந்து வந்த எம்ஜிஆரும், சிவாஜியும் மெல்ல, மெல்ல திரை துறையை விட்டு விலகத் தொடங்கிய காலகட்டம் அது. மேலும் எம்ஜிஆர் அரசியலில் கோலோச்ச தொடங்கிய காலமும் அதுதான்.

Rajiniganth

அதோடு, சினிமாவில் நடிப்பதற்கு கலராக இருந்தால் மட்டும் போதும் நடித்து விடலாம் என்ற தவறான எண்ணத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்து, அதன் பின்னர் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் தான் ரஜினிகாந்த். அப்போது அவர் செய்த பல்வேறு ஸ்டைலான விஷயங்களை தான் இன்றளவும் பல கதாநாயகர்கள் செய்து வருகிறார்கள்.

Rajiniganth

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துவரும் ரஜினிகாந்த், துறை ரீதியாக மிகப்பெரிய 11 வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். அதோடு இவர் நடிப்பில் வெளியான 2 திரைப்படங்கள் 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்வதற்கான வாய்ப்பிருக்கிறது. இப்படிப்பட்ட உண்மையான கதாநாயகனின் 73-வது பிறந்தநாள் இன்று அவருக்கு நாம் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிக்கலாமே.