பிகில் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக விஜய் நடித்துள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் ஹுரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது மூன்று நாள் வசூலாக தமிழகத்தில் மட்டும் 60 கோடி எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, தெலுங்கு 30 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.