
Bigil vijay
தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக உருவாகியுள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் ஹுரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதுவரை 200 கோடி வசூல் சாதனை செய்து வந்தது. இன்னும் 50 கோடி வசூல் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில் தற்போது அனைத்து திரையரங்கிலும் கூட்டம் இல்லாமல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
அதில் முக்கிய திரையரங்கான சென்னையில் உள்ள தேவி பாரடைஸ் தியேட்டரில் கூட்டம் இல்லாத காரணத்தால் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 திரையரங்கில் ஓடிய காட்சிகள் தற்போது ஒரு திரையரங்கில் மட்டும் ஓடி வருகிறது பிகில் படம்.பிகில் படம் வந்த ஒரு வாரத்திற்குள் இப்படி ஒரு சோதனையா என தியேட்டர் உரிமையாளர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement