பட்டையை கிளப்பி வெளியான மாஸ் தகவல்.! தளபதி ரசிகர்களே தெறிக்கவிட தயாரா!!

பட்டையை கிளப்பி வெளியான மாஸ் தகவல்.! தளபதி ரசிகர்களே தெறிக்கவிட தயாரா!!


bigil-movie-trailer-update-released

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்த படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Bigilஇந்நிலையில்  பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விஜய் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானது.மற்றும் இணையத்தையே கலக்கியது. 

அதனை தொடர்ந்து தளபதி ரசிகர்கள் படம் ரிலீசாகும் நாளுக்காக, மற்றும் ட்ரைலருக்காக பெருமளவில் காத்திருக்கின்றனர். 
இந்நிலையில் பிகில் திரைப்படத்தின் டிரைலர் வரும் 12-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தற்போது படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து, இதைக் கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் பிகில் டிரைலர் ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.