சினிமா

பிரபல சன் டீவி சீரியலில் நடிக்கும் பிக்பாஸ் வனிதா! அதுவும் எந்த சீரியல் தெரியுமா?

Summary:

Bigg boss vanitha in sun tv chandraleka

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்றின் மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன்பின்னர் ஒருசில படங்களில் நடித்துள்ளார் வனிதா.

இந்நிலையியல் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனிதா ஒருசில காரணங்களால் சில வாரங்களிலையே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு  பின்னர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர் போட்டியின் இறுதிவரை சென்ற இவர் மீண்டும் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் வனிதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மீண்டும் விஜய் டிவிக்கு வரப்போவதாக செய்திகள் வெளியான நிலையில் வனிதா சன் டீவியில் ஒளிபரப்பாகிவரும் சந்த்ரலேகா என்ற தொடரில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அந்த தொடரில் ஹீரோ, ஹீரோயினுக்கு உதவும் கதாபாத்திரமாக அதுவும் வனிதாவாகவே அதில் நடிக்க உள்ளாராம். சந்த்ரலேகா என்ற படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான வனிதா தற்போது மீண்டும் சந்த்ரலேகா என்ற பெயரில் சின்ன திரையில் அறிமுகமாகவுள்ளார்.


Advertisement