இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே போனது இவர்தான்? வெளியான உறுதியான தகவல்.



Bigg boss this week nomination name leaked

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 76 நாட்களை கடந்துவிட்ட பிக்பாஸ் சீசன் 3 காதல், சர்ச்சை என ரசிகர்களை சுவாரசியமாக அழைத்துச்செல்கிறது. போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிவருவதால் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

கடந்த வாரம் எலிமினேஷன் இல்லாத நிலையில் இந்த வாரம் கட்டாயம் எலிமினேஷன் உண்டு என கமல் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது என அனவைரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் இந்த வாரம் இயக்குனர் சேரன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

bigg boss tamil

மேலும், விருந்தினர்களாக வீட்டிற்குள் வந்த அபிராமி, ஷாக்க்ஷி மற்றும் மோகன் வைத்யா ஆகிய மூவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுவரை லாஷ்லியாவுக்கு ஆதரவாக சேரன் இருந்துவந்த நிலையில் சேரன் அப்பா இல்லாமல் லாஷ்லியா மீதி நாட்களை எப்படி கடக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.