பாடலில் புகழ்ந்த கண்ணதாசன்.! ஸ்டுடியோவில் சிரித்த எம்.ஜி.ஆர்.!
இறுதி நேரத்தில் வெளியே கசிந்த தகவல்! பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறும் நபர் இவர்தான்!
இறுதி நேரத்தில் வெளியே கசிந்த தகவல்! பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறும் நபர் இவர்தான்!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறப்போகிறார் என்ற தகவல் வெளியே கசிந்துள்ளது.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டு வாரங்களை நெருங்கியுள்ளது. வழக்கம்போல் இந்த சீசனிலும் சண்டை, சமாதானம், அழுகை, சோகம் என பிக்பாஸ் போட்டியாளர்கள் காரசாரமாக விளையாடிவருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் வெளியேற்றப்படாதநிலையில் இந்த வாரம் ஒருவர் கட்டாயம் வெளியேறுவார் கமல் ஹாசனே நேற்று கூறிவிட்டார்.
அதுமட்டும் இல்லாமல் ஆஜித், ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோரும் இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து நேற்று காப்பாற்றப்பட்டனர். இதனை அடுத்து ரேகா மற்றும் சனம் ஆகிய இருவரும் இந்த வாரத்திற்கான எவிக்சனில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரில் ஒருவர் கட்டாயம் இன்று வெளியேறுவது உறுதி.
அதில், நடிகை சனம் ஷெட்டி காப்பாற்றப்பட்டு, நடிகை ரேகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உண்மையில் ரேகாதான் வெளியேறினாரா? அல்லது சனம் வெளியேறினாரா என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.