சினிமா Bigg Boss

பிக்பாஸ் சீசன் நான்கு தமிழ் இந்த தேதியில்தான் தொடங்க போகுதாம்..! என்னைக்கு தெரியுமா.?

Summary:

Bigg boss season 4 date

பிக் பாஸ் சீசன் 4 விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக விஜய் தொலைக்காட்சி சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் சீசன்4 தொடங்கும் தேதி குறித்த கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மாபெரும் வெற்றிபெற்ற தொடர்களில் ஒன்று பிக் பாஸ். இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில் இந்த ஆண்டு தொடங்க இருந்த பிக்பாஸ் சீசன் 4 கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் பிக் பாஸ் சீசன் 4 விரைவில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் விஜய் தொலைக்காட்சியும் தற்போது அதிகாரப்பூர்வமாக பிக் பாஸ் சீசன் 4 விரைவில் தொடங்க இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

இதனிடையே போட்டி தொடங்கும் நாள் குறித்த விவரம் இதுவரை வெளியாகாத நிலையில் அக்டோபர் 4-ம் தேதி பிக் பாஸ் சீசன் 4 தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. 
 
ஆனால் சீசன் 4 தொடங்கும் தேதி குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் விஜய் தொலைக்காட்சி இன்று வரையில் வெளியிடவில்லை. மேலும் விரைவில் சீசன் நான்கிற்க்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement