சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் சரவணனின் முதல் மனைவி இவரா? அவருக்குப்பின்னால் இப்படி ஒரு சோகமா? புகைப்படம்.

Summary:

Bigg boss saravanan first wife photo goes viral

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. ஏறக்குறைய இரண்டு வாரங்கள் முடிந்துள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது யார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மொத்தம் 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் பருத்திவீரன் பட புகழ் சரவணனும் ஒருவர். கடந்த வாரம் லக்ஸரி பட்ஜெட்டிற்கான டாஸ்கில் தனது திருமண வாழ்க்கை குறித்தும், குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் பேசி அனைவரையும் கண்கலங்க வைத்தார் சரவணன்.

அதில் முதல் மனைவியுடன் திருமணம் முடிந்து குழந்தை இல்லை என்றும், இதனால் தனது சகோதரர்கள் தன்னை கேவலமாய் பேசியக்கதவும், தற்போது இரண்டாவது திருமணம் முடிந்து தனக்கு ஒரு மகன் இருப்பதாகவும் கூறினார் சரவணன்.

இந்நிலையில் சமீபத்தில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள சரவணன் முதல் மனைவி சூர்யா கூறுகையில் நாங்கள் இருவரும் காதலித்துதான் திருமணம் செய்துகொண்டான், எங்களுக்கு குழந்தை இல்லை. இதனால் பல்வேறு மருத்துவமனைகள் ஏறி இறங்கியும் எங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை.

இதனால் எனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நான்தான் அவருக்கு இரண்டவு திருமணம் செய்துவைத்தேன். மேலும், திருமணத்திற்கான அணைத்து செலவுகளையும் நான்தான் செய்ததாக கூறியுள்ளார் சூர்யா.


Advertisement