சினிமா Bigg Boss

இவர்தான் பிக்பாஸ் சம்யுக்தாவின் கணவரா? வைரலாகும் அவரின் குழந்தை மற்றும் குடும்ப புகைப்படம்.

Summary:

பிக்பாஸ் தமிழ் சீசன் நான்கில் விளையாடிவரும் போட்டியாளர்களில் ஒருவரான சம்யுக்தாவின் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் நான்கில் விளையாடிவரும் போட்டியாளர்களில் ஒருவரான சம்யுக்தாவின் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

மூன்று சீசன்களாக வெற்றிபெற்ற பிக்பாஸ் தொடரின் சீசன் நான்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் நான்கில் முதல் போட்டியாளராக நடிகை ரேக்கா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்த தொகுப்பாளினி அர்ச்சனாவுடன் சேர்த்து 16 பேர் இந்த நிகழ்ச்சியில் விளையாடிவருகின்றனர். இந்த 16 பேரில் ஒருவர்தான் சம்யுக்தா. மாடலிங், நடனத்தில் தீராத ஆர்வம்கொண்ட இவர், பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி பாவனாவுக்கு நெருங்கிய தோழியாவார்.

மேலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராதிகா சரத்குமாரின் ‘சந்திரகுமாரி’ சீரியலில் ராஜகுமாரி ருத்ரா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் ஒலு என்னும் மலையாளப்படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் அறிமுகம் ஆனார் சம்யுக்தா.

இவருக்கு திருமணம் முடிந்து நான்கு வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இவரின் மகன், கணவர் மற்றும் குடும்பத்தினரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement