தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
லாஷ்லியாவின் தந்தை இறந்தநிலையில் லாஷ்லியாவுக்காக உதவும் விஜய் டிவி.. வனிதா வெளியிட்ட வைரல் பதிவு

லாஷ்லியாவின் தந்தை நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்தநிலையில் லாஷ்லியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஷ்லியா. லாஷ்லியா மட்டுமில்லாமல் அவரது மொத்த குடும்பமும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானது. குறிப்பாக லாஷ்லியாவின் தந்தை மரியநேசன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தபோது தனது மகளின் காதல் குறித்து கண்டித்தும், அவர் நடந்துகொண்ட விதமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரமிப்பதை ஏற்படுத்தியதை அடுத்து அவரையும் ஒரு பிரபலமாகவே ரசிகர்கள் கருத ஆரம்பித்தனர்.
இந்நிலையில் கனடாவில் தங்கி வேலைபார்த்துவந்த லாஷ்லியாவின் தந்தை நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் லாஷ்லியாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் லாஷ்லியாவிடம் பேசியதாகவும், அவர் அழுதுகொண்டே இருந்தாலும் அவர் தைரியமாக இருப்பதாகவும், அவர் இலங்கை செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை தூதரகம் மூலம் செய்து வருவதாகவும் நடிகை வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், லாஷ்லியாவுடன் விஜய் தொலைக்காட்சி குழுவினர் இருப்பதாகவும், அவர்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்துவருவதாகவும் வனிதா அந்த பதிவில் தெரிவித்துள்ளார். அதேநேரம் கொரோனா காலம் என்பதால் லாஷ்லியாவின் தந்தை உடலை கனடாவில் இருந்து இலங்கை கொண்டுவர தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
To all #Losliya fans ...I spoke to her she is devastated and crying..but she will be strong she's trying to fly to srilanka.arranging thru embassy @vijaytelevision team is with her.due to covid pandemic the body can't reach srilanka immediately.ive given her my love and blessings https://t.co/nWMvNV9Xms
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 16, 2020