சினிமா

பிக் பாஸ் ஜூலியன் காதலர் இந்த பிரபல விளம்பரத்தில் நடித்துள்ளாரா? எந்த விளம்பரம் தெரியுமா?

Summary:

Bigg boss julie boy friend in famous tv ad

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ஜூலி. போராட்டத்தில் இவர் பேசிய வசனங்கள், இவரது கம்பீரம் பார்த்து பலர் இவருக்கு ரசிகர்களாக மாறினர். இந்த புகழை பயன்படுத்திக்கொண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்றார் ஜூலி.

போட்டியின் ஆரம்பத்தில் மக்கள் ஆதரவு முழுவதும் ஜூலிக்குதான் இருந்தது. போட்டியின் இறுதிவரை சென்று வெற்றிபெறுவார் என எதிர்பார்த்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இவர் செய்த காரியத்தால் மக்கள் அனைவரும் இவர் வெறுக்க ஆரம்பித்தனர்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் இன்றுவரை வலைதளவாசிகள் ஜூலியை  விடுவதாக இல்லை. ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து அவரை கலாய்த்துக்கொண்ட வருகின்றனர். சமீபத்தில் இதுகுறித்து வீடியோ ஒன்றையும் ஜூலி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜூலி ஒருவரை காதலிப்பதாகவும் அவருடன்தான் அதிகநேரம் ஊர் சுற்றிவருவதாகவும் செய்திகள் வெளிவந்தது. அவர் பெயர் மார்க் ஹம்ரான். இருவரும் சேர்ந்து விரைவில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இருவரும் காதலிக்கின்றார்களா இல்லையா என்பது குறித்து அதிகாரபூர்வமாக எதுவம் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் ஜூலியன் காதலர் என கூறப்படும் மார்க் மக்கள் அதிகம் பார்த்திருக்கும் பிரபல லுங்கி விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். நண்டு பிராண்ட் லுங்கி விளம்பரத்தில் இறுதியில் மார்க் வரும் அந்த விளம்பரம் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement