பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்தபின் அர்ச்சனா எந்த போட்டியாளர்களை சந்தித்துள்ளார் பாருங்கள்.. வைரல் புகைப்படம்Bigg boss archana met jiththan ramesh and nisha

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியாவந்த தொகுப்பாளினி அர்ச்சனா தனது சக போட்டியாளர்களை சந்தித்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. வழக்கமான சீசன்களை போல இந்த முறையும் சண்டை, சமாதானம், அழுகை என பிக்பாஸ் வீடு காரசாரமாக உள்ளது. இதுவரை 11 வாரங்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி 12 வது வாரத்தை நெருங்கியுள்ளது.

இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் செண்ட்ரா அர்ச்சனா பெரியளவில் வரவேற்பை பெறவில்லை.

Bigg boss

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அர்ச்சனா தனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினர். தற்போது தனக்கு முன்னதாக வீட்டில் இருந்து வெளியே வந்த சக போட்டியாளர்களாக ஜித்தன் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோரை சந்தித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Bigg boss