சினிமா

பிரியங்கா கேட்ட ஒத்த கேள்வி! கடுப்பாகி நறுக்கென ராஜு கொடுத்த பதிலடி! இன்னிக்கு ரணகளம்தான்!!

Summary:

பிரியங்கா கேட்ட ஒத்த கேள்வி! கடுப்பாகி நறுக்கென ராஜு கொடுத்த பதிலடி! இன்னிக்கு ரணகளம்தான்!!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது தற்போது நாளுக்கு நாள் வாக்குவாதங்கள், மோதல்கள் என சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. மேலும் பிக்பாஸ் கொடுக்கும் வித்தியாசமான டாஸ்க்குகளால் போட்டியாளர்கள் தங்களது சுய ரூபங்களை காட்டத் தொடங்கியுள்ளனர். மேலும் தற்போது பிக்பாஸ் கொடுத்துள்ள வெற்றிக்கொடி கட்டு என்ற டாஸ்கால் பிக்பாஸ் வீடே களைக்கட்டி வருகிறது.

நேற்றைய நிகழ்ச்சியில் பிரியங்காவால் போட்டியாளர்கள் மத்தியில் மோதல் வெடித்தது. இந்த நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், பிரியங்கா ராஜூவை பார்த்து மிகவும் பாதுகாப்பாக கேம் விளையாடுகிறீர்கள். உங்களுக்கு தேவையான மக்களுக்காக மட்டுமே குரல் கொடுத்து கேள்விகள் கேட்குறீர்கள் என கூறியுள்ளார்.


இதனால் ஆவேசமடைந்த ராஜு பதிலடி கொடுக்கும் வகையில், என் கண் முன்னாடி நடப்பது குறித்து நான் பேசலாமா கூடாதா என கேட்க, அதற்கு பிரியங்கா, பேசலாம் ஆனால் பப்ளிக்காக பேசுவது தவறு என கூறியுள்ளார். உடனே ராஜு அப்போ எங்க தனியா கூடிட்டு போய் பேசட்டும் சொல்லுங்க என நறுக்கென பேசியுள்ளார். இதனால் பிக்பாஸ் வீட்டில் இன்று சண்டை வெடிக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement