சினிமா

அவன மட்டும் நம்பவே கூடாது.! கடுப்பான பிக்பாஸ் பாலா! யாரை குறிப்பிட்டுள்ளார் தெரியுமா?

Summary:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்க 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 மிகவும் விறுவிறுப்பாக  56 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டுள்ளது. போட்டியின் இரண்டாவது வாரம் நடிகை ரேகா பின் பாடகர் வேல்முருகன் அவரை தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தி, பாடகி சுசித்ரா மற்றும் கடந்தவாரம் சம்யுக்தா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றபட்டனர்.

மேலும் பிக்பாஸ் நாள்தோறும் வித்தியாசமான பல டாஸ்குகளை கொடுத்து வருகிறார். இதனால் மோதல்,வாக்குவாதங்களும் உருவாகி வருகிறது. இவ்வாறு கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் கால்செண்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க் தற்போது மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த வாரம் ஊழியர்களாக பதிலளித்து வந்த  போட்டியாளர்கள் இந்த வாரம் சரமாரியாக வரைமுறையின்றி கேள்விகளை எழுப்ப உள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான முதல் ப்ரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஆரிக்கு பாலா போன் செய்துள்ளார். மேலும் அப்பொழுது அவர்,  நான் யாரையும் காலி பண்ணி விளையாட மாட்டேன் அனைவரும் வாங்க ஒன்றாக விளையாடுவோம் என அடிக்கடி கூறுவீர்கள். நீங்க உண்மையாவே அப்படி நினைக்கவில்லையா?  நான் கெட்டவன் அப்படின்னு சொல்றவங்கள நம்பலாம், ஆனால் நான் மட்டும்தான் நல்லவன் என்று சொல்றான் பாருங்க அவன நம்பவே கூடாது என ஆரியை சுட்டிகாட்டி சூசகமாக பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement