பாவனிக்கு தாலி கட்டி திருமணம் செய்த அமீர்.! அதுவும் எங்கு தெரியுமா?? தீயாய் பரவும் வீடியோ!!

பாவனிக்கு தாலி கட்டி திருமணம் செய்த அமீர்.! அதுவும் எங்கு தெரியுமா?? தீயாய் பரவும் வீடியோ!!


bigboss-jodikal-promo-video-viral-PBUTCY

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் பாவனி. அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சக போட்டியாளரான அமீருடன் நெருங்கி பழகினார். மேலும் அமீர் அவருக்கு ப்ரபோஸ் செய்தார். 

பிறகு இருவரும் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்துகொண்டு அசத்தலாக நடனமாடி வருகின்றனர். அங்கும் அமீர் பாவனிக்கு தொடர்ந்து தனது காதலை கூறிகொண்டே இருந்தார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாமல் தயங்கி இருந்த பாவனி ஒருவழியாக தானும் காதலிப்பதை தெரிவித்துள்ளார். மேலும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் பாவனிக்கு மோதிரம் ஒன்றை காதல் பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆஹா கல்யாணம் என்ற சுற்று நடைபெறுகிறது. அதில் போட்டியாளர்கள் திருமணம் சம்பந்தப்பட்ட நடனமாடவேண்டும். இந்நிலையில் அமீர் மற்றும் பாவனியும் நடனமாடியுள்ளனர். அப்பொழுது அமீர் பாவனி கழுத்தில் தாலி கட்டி, அவரது நெற்றியில் குங்குமம் வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.