சினிமா

வாவ்.. எவ்ளோ சந்தோசமா இருந்திருக்காரு! வைரலாகும் கணவரை இழந்த பிக்பாஸ் பாவனி ரெட்டியின் திருமண வீடியோ!!

Summary:

வாவ்.. எவ்ளோ சந்தோசமா இருந்திருக்காரு! வைரலாகும் கணவரை இழந்த பிக்பாஸ் பாவனி ரெட்டியின் திருமண வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இந்த சீசனில் பல்வேறு துறையைச் சேர்ந்த பல பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். மேலும் இதில் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ள புதுமுகங்களும் ஏராளம்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 வில் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான நடிகை பாவனி ரெட்டியும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி மற்றும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற சின்னத்தம்பி தொடர்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சில நாட்களிலேயே இவருக்கென பெரும் ஆர்மி உருவானது.

இந்த நிலையில் கடந்த வாரம் ஒரு கதை சொல்லலாமா என்ற டாஸ்க்கில் தனது காதல் கணவர் குறித்தும் அவர் தற்கொலை செய்து கொண்டது குறித்தும் கண்கலங்கியவாறு வேதனையுடன் பாவனி தெரிவித்திருந்தார். மேலும் தனது கணவர் தன்னை குழந்தையைப்போல பார்த்து கொண்டதாகவும், அவர் அவ்வாறு செய்ததால் தான் கோபம் அடைந்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவரது திருமண வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றது.


Advertisement