ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
"பிக்பாஸ் ஐஷு அம்மாவின் வைரலாகும் உருக்கமான பதிவு!" திட்டி கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து, தற்போது ஏழாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே அனல் பறக்கிறது. சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் ஒவ்வொரு நாளின் எபிசோடும் இருக்கிறது.
இந்த சீசனில் அமீரின் தங்கையான ஐஷு பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மிகவும் அமைதியாக நல்ல பெண்ணாக இருந்த ஐஷு, தற்போது நிக்சனுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். கேமரா இல்லாத இடமாக பார்த்து ஐஷு - நிக்சன் ஜோடி நெருக்கம் காட்டி வருகிறது.
மேலும் ஐஷு சக போட்டியாளர் மாயாவுடன் சேர்ந்து புறணி பேசுவது, திரைமறைவு வேலை செய்வது என்று மிக மோசமாக நடந்து கொள்கிறார். இதனால் பார்வையாளர்கள் ஐஷு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் ஐஷுவின் அம்மா ஷைஜி இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்று பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் , " எல்லாவற்றையும் உணர்ந்து நீ, நீயாகவே இரு ஐஷு. எங்களுக்கு இந்த ஐஷு வேண்டாம். நாங்கள் எங்களுடைய ஐஷுவை தான் பார்க்க விரும்புகிறோம். உண்மை எது, பொய் எது என்று நீ விரைவில் உணர்வாய் என்று நம்புகிறேன்" என்று உருக்கமாக அந்தப் பதிவில் கூறியுள்ளார்.