டிஆர்பி-யில் பிக்பாஸ்3 செய்த சாதனை! இவ்வளவா -அதிர்ச்சியில் ரசிகர்கள்!

டிஆர்பி-யில் பிக்பாஸ்3 செய்த சாதனை! இவ்வளவா -அதிர்ச்சியில் ரசிகர்கள்!


Big boss3 telugu

ஆங்கில தொலைக்காட்சியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பிரதர், இந்தியாவில் ’பிக் பாஸ்’ என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டது. முதலில் இந்தியில் வெளியாகி அங்குள்ள பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் பரவியது. தென்னிந்தியாவில் பிக்பாஸ் முதல் சீசனுக்கான வரவேற்பு தமிழில் தான் அதிகம் இருந்ததாக கூறப்பட்டது. தற்போது தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

big boss3

தெலுங்கிலும் பிக்பாஸ் முதல் சீசன் மற்றும் இரண்டாவது சீசன் பார்வையாளர்களிடம் பெரிய வரவேற்பை பதிவு செய்தது. முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். இரண்டாவது சீசனை நானி தொகுத்து வழங்கினார்.

சமீபத்தில் தொடங்கிய பிக்பாஸ் தெலுங்கு சீசன் 3 நிகழ்ச்சியை டோலிவுட் சினிமாவின் மூத்த நடிகரான அக்கினேனி நாகர்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார்.

big boss3

ஆனால் பிக்பாஸ் துவங்கிய முதல் நாள் ஷோ 17.9 டிஆர்பி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது என தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

மூன்று சீசன்களிலும் இது தான் அதிகபட்சம் என்றும் கூறப்படுகிறது.