சினிமா

அடேங்கப்பா.. இந்த வயசுலயும் வேற லெவல்! செம்ம ஆட்டம் போட்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை! அதுவும் எந்த பாடலுக்கு பார்த்தீங்களா!!

Summary:

அடேங்கப்பா.. வேற லெவல்! பரம் சுந்தரி பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை! வாயடைத்துப் போன ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. நாளுக்குநாள் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில்  ஹீரோ பாரதியின் அம்மாவாக, கண்ணம்மாவின் மாமியாராக சவுந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரூபா ஸ்ரீ. இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் ஹீரோயினாகவும், முக்கிய காதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி நடிகை ரூபாஸ்ரீ மலையாள படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது நடன வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவார். 

 இந்நிலையில் அவர் தற்போது இணையத்தில் செம ட்ரெண்டாகி வரும் பரம் சுந்தரி பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் இந்த வயதிலும் என்னவொரு இளமை என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.


Advertisement