பிரபலமான நடிகர்கள் பட்டியலில் நடிகர் விஜய் முதலிடம்.! தல அஜித் எத்தனையாவது இடம் தெரியுமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!



best-actor-list

இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர்களாக இருப்பவர்கள் பாலிவுட் நடிகர்கள். சமீப காலமாகவே பாலிவுட் திரைப்படங்களையும் தாண்டி தென்னிந்திய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வருகின்றது. சமீபத்தில் வெளியான, கேஜிஏஃப்-2, விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் உலக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்திய அளவில் மிகவும் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள் பட்டியலில் முதல் இடத்தை நடிகர் விஜய் பிடித்துள்ளார். ஓர் மேக்ஸ் ஸ்டார் இந்தியா வெளியிட்டுள்ள இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் விஜய், பிரபாஸ், யாஷ், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.


இந்த பட்டியலில் அக்ஷய்குமார் 6வது இடத்திலும், மகேஷ்பாபு, அஜித்குமார், ராம்சரண் 7, 8, 9 இடத்திலும் நடிகர் சூர்யா 10வது இடத்திலும் உள்ளனர். தல அஜித்தின் பெயர் 8 வது இடத்தில் இடம் பெற்றதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.