முன்னணி ஹீரோவை விந்தணு தானம் செய்ய சொன்ன தொகுப்பாளினி பாவனா - சர்ச்சையை ஏற்படுத்திய ட்விட்டர் பதிவு.

முன்னணி ஹீரோவை விந்தணு தானம் செய்ய சொன்ன தொகுப்பாளினி பாவனா - சர்ச்சையை ஏற்படுத்திய ட்விட்டர் பதிவு.


bavana-twiiter

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக சிறந்த தொகுப்பாளினியாக பணியாற்றியவர் பாவனா. இவர் ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். 

ஆனால் சில ஆண்டுகளாக காணமல் போயிருந்தார்.அதன் பிறகு சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார் பாவனா. அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோகளையும் பதிவிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார். 

Var

இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த ட்வீட் வைரலாகி வருகிறது. அதாவது ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷ்ராப் நடித்த வார் படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் அந்த படத்தை பார்த்துவிட்டு வாழ்த்தியதோடு அந்த ஹீரோக்களை விந்தணு தானம் செய்ய கேட்டுக்கொண்டுள்ளார் பாவனா.