சினிமா

அவசரஅவசரமாக ஐபிஎல் வர்ணனையாளர் பணியிலிருந்து விலகிய பிரபல தொகுப்பாளினி பாவனா! உருக்கமாக அவரே வெளியிட்ட ஷாக் தகவல்!

Summary:

பிரபல தொகுப்பாளினி பாவனா தனது பெற்றோருக்கு கொரனோ உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர்களைக் கவனித்துக் கொள்வதற்காக ஐபிஎல் தொடரின் வர்ணனையாளர் பணியில் இருந்து விலகியுள்ளார்.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பாவனா. மேலும் அவர் அவ்வபோது சமூக வலைதளங்களில் இசை ஆல்பத்தையும் வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி அவர் ஐபிஎல் போட்டியின் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

ஐபிஎல் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. அதனால் ஐபிஎல் போட்டியில் வர்ணனையாளராக பணியாற்றிவரும் பாவனாவும் துபாயில் தங்கி வருகிறார். இதற்கிடையில் பாவனாவின் பெற்றோருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக அவர் வர்ணனையாளர் பணியிலிருந்து விலகி இந்தியா திரும்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக கனத்த மனதுடன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன். எனது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது ஒரே மகளாக நான் சென்னையில் இருக்க வேண்டியுள்ளது. இந்த சீசன் முழுவதும் நீங்கள் அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி. எனது பெற்றோருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என கூறியுள்ளார். 


Advertisement