தமிழகம் சினிமா

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி.! அவருக்கு என்னாச்சு.? குஷ்பு வெளியிட்ட முக்கிய தகவல்.!

Summary:

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமன

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பாரதி பாஸ்கர். இவர் சாலமன் பாப்பையா நடத்தும் பட்டிமன்றங்களில் அதிகளவில் கலந்துகொண்டு தனது பட்டிமன்ற பேச்சால் உலகளவில் உள்ள தமிழர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றவர் ஆவார். கெமிக்கல் இன்ஜினீயரிங் மற்றும் எம்பிஏ படித்திருக்கும் இவர் தனியார் வங்கியில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.

 இந்தநிலையில், பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவரை சோதனை செய்ததில் மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நடிகை குஷ்பு அவரது ட்விட்டர் பக்கத்தில், அழகிய தமிழில் அழகான புன்னகையுடன் நன்கு அறியப்படும் பாரதி பாஸ்கருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவரது மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவர் மிக விரைவாக குணமடைய வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.


Advertisement