பாக்கியலட்சுமி சீரியல் இனியாவிற்கு திடீர் திருமணமா.. வெளியான புகைப்படத்தால் பரபரப்பு.?
பாக்கியலட்சுமி சீரியல் இனியாவிற்கு திடீர் திருமணமா.. வெளியான புகைப்படத்தால் பரபரப்பு.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் "பாக்கியலட்சுமி". இத்தொடரில் நாயகி பாக்கியா, எத்தனை தடைகள் வந்தாலும், தனியாக அனைத்தையும் எதிர்த்து போராடி, தன் குழந்தைகளுக்காக வாழும் ஒரு தாயாக நடித்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
தினமும் புதுப்புது திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், பாக்கியாவின் மகளாக நடித்து வருபவர் இனியா. இவரது நிஜப்பெயர் நேஹா மேனன். இவர் கேரளாவைச் சேர்ந்த சாலக்குடியில் பிறந்தவர். இவர் குழந்தை நட்சத்திரமாக 'பைரவி' என்ற சீரியலில் தான் அறிமுகமானார்.
தொடர்ந்து பிள்ளைநிலா, தமிழ்ச்செல்வி, நிறம் மாறாத பூக்கள் ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான 'வாணி ராணி' சீரியலில் இவரது நடிப்பு அதிகம் பேசப்பட்டது. சித்தி-2 சீரியலிலும் ராதிகாவின் மகளாக நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் நேஹா, தற்போது மணப்பெண் போல அலங்காரம் செய்து கொண்டு ஏராளமான புகைப்படங்கள், வீடியோக்களையும் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இனியாவிற்கு கல்யாணமா என்று அதிர்ச்சியில் உள்ளனர்.