சினிமா

ஹீரோயின் போல் வளர்ந்துவிட்ட அனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம்

Summary:

நடிகை அனிகா சுரேந்திரன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகை அனிகா சுரேந்திரன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பிரபலமாக உள்ளவர் நடிகை அனிகா  சுரேந்திரன். என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்ததை அடுத்து தமிழ் சினிமாவில் பிரபலமான இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் என  பல திரைப்படங்களில் நடித்து இவருக்கு சமூக வலைத்தளங்களில் தனி ரசிகர்கள்  பட்டாளமே உள்ளது. தற்போது தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் இளம் நடிகைகளில் இவரும் ஒருவர்.

சினிமாவில் பிஸியாக இருந்தாலும், ஒருபுறம் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் வாங்குவதும், பல நேரங்களில் மோசமான கமெண்ட்ஸ் வாங்குவதும் வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement