சினிமா

அட்லீ தன் மனைவியுடன் இன்று எங்கு சென்றுள்ளார் தெரியுமா?

Summary:

Atlee priya bigil

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ  மூன்றாவது முறையாக தளபதி விஜயை வைத்து எடுத்துள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் விஜய் கால் விளையாடும் பெண்களின் கோச்சாக நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை ஏ. ஜி. எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படம் இன்று உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இதற்கு முன்பு வெளியான டிரைலர் சாதனையை விட வசூலில் அதிக சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தை இயக்கிய அட்லீ அவர்கள் தன் மனைவியுடன் பிகில் படத்தை பார்க்க சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கிற்கு சென்றுள்ளார். 


Advertisement