சினிமா

அடேங்கப்பா! தளபதி ரசிகர்களுக்கு இப்படியொரு வித்தியாசமான ஆசையா? அட்லீயின் ஒத்த பதிலால் செம ஹேப்பி!

Summary:

Atlee answered for vijay vijay about rayappan gangstar movie

அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து உருவாகிய படம் பிகில். இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பை பெற்றது.

மேலும் விஜய்க்கு அப்பாவாக நடித்த ராயப்பன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானது. அதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் பலரும் அட்லியிடம் பிகில் படத்தில் வந்த ராயப்பன் கேரக்டரின் கதையை மாஸான கேங்ஸ்டர் படமாக எடுக்க வேண்டும் என கேட்டு வந்தனர்.

அதனை கண்ட அட்லீ  நண்பா செஞ்சிட்டா போச்சு என பதில் அளித்துள்ளார்.இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

 


Advertisement