சினிமா

வீட்டு மொட்டை மாடியில் கடுமையான உடற்பயிற்சி செய்யும் நடிகர் அருண் விஜய்! வைரலாகும் வீடியோ.

Summary:

Arun vijay heavy workout in his terrace

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 600க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கண்கானிக்கப்பட்டு வருகின்றனர். இந்நோயால் இந்தியா முழுவதும் இதுவரை 10க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

அதிலும் தமிழகத்தில் மட்டும் இந்நோயால் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் படி வரும் ஏப்ரல் 15-ம் தேதிவரை அனைவருக்கும் பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவு புறப்பித்துள்ளார். இதனால் மக்கள் தங்களது வீடுகளிலேயே இருந்து வருகின்றனர். அதேபோல் நடிகர் அருண் வீட்டில் இருப்பதால் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று கடுமையான உடற்பயிற்சி செய்துள்ளார். அந்த வீடியோவை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில் நடிகர் அருண் விஜய் வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். வீட்டிலேயே ஏதாவது உடற்பயிற்சி செய்து ஃபிட்டாக இருங்கள். தேவையில்லாமல் வெளியில் எங்கும் செல்லவேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement