சினிமா

அடேங்கப்பா.. சர்வைவர் நிகழ்ச்சிக்காக நடிகர் அர்ஜுன் வாங்கும் சம்பளம் இவ்வளவா? வெளிவந்த தகவல்!!

Summary:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வித்தியாசமாக, திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான ரியாலிட்டி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வித்தியாசமாக, திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி சர்வைவர். 90 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

அதாவது இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ராந்த், நடிகை சிருஷ்டி டாங்கே, பெசன்ட் ரவி, அம்ஜத் கான், விஜே பார்வதி, லட்சுமி பிரியா, ராப் பாடகர் லேடி காஷ், காயத்ரி ரெட்டி, உமாபதி ராமையா, நந்தா, விஜயலட்சுமி, இந்திரஜா சங்கர், சரண் சக்தி, நாராயணன் லக்கி, ராம் சி ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார்.

இரண்டாவது நாள் முதலே போட்டிகள், சவால்கள் தொடங்கப்பட்டு, சண்டை மற்றும் சச்சரவுகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக அர்ஜுன் வாங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதாவது அர்ஜுன் சர்வைவர் நிகழ்ச்சிக்காக மொத்தம் 5 கோடி ரூபாய்  சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும் அர்ஜுன் தயாரித்து அவரது மகள் நடிக்கும் சில படங்களையும் ஜீ தமிழ் சேனல் வாங்க  பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

 


    


Advertisement