தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
இணையத்தை கலக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜூனின் திருமண புகைப்படம்!! வாவ்..அப்போ எப்படி இருக்காரு பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக, ஆக்சன் கிங்காக ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன். அவரது படங்கள் என்றால் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். அதற்கு காரணம் அவர் நாட்டுப்பற்று மிகுந்த, தேசிய கருத்து நிறைந்த படங்களிலேயே பெருமளவில் நடித்திருப்பார்.
குறிப்பாக நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த முதல்வன், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. நடிகர் அர்ஜுன் தமிழ் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து அசத்தியுள்ளார். நடிகர் அர்ஜுனுக்கு 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
Happy Anniversary Appa Amma ❤️❤️ pic.twitter.com/Akos4I0wDm
— Aishwarya Arjun (@aishwaryaarjun) February 8, 2021
இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் நேற்று தனது திருமண நாளைக் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா தனது அம்மா, அப்பாவிற்கு வாழ்த்து கூறி ட்விட்டர் பக்கத்தில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், திருமண கொண்டாட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறிவருகின்றனர்.