திருமணத்திற்கு ஒருவாரம் முன் தோழி, தங்கைக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்த அர்ஜுன் மகள்; வைரல் கிளிக்ஸ்.!Arjun Daughter Aishwarya Bachelor Party 

 

தமிழ் திரையுலகில் முக்கிய கதாநாயகனாவும், ஆக்சன் கிங்காகவும் வலம்வந்தவர் அர்ஜுன். தற்போது குணசித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவரின் மகள் ஐஸ்வர்யா, தமிழில் விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானை படத்தில் நடித்து இருந்தார். 

Actor arjun daughter

இதனிடையே, அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உம்பதியுடன் காதலில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. இவர்களின் காதல் விவகாரம் பின்னாளில் பெற்றோருக்கும் தெரியவந்த நிலையில், அவர்கள் பேசி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இந்தியன் திரைப்படம்; திரையரங்கில் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்த கமல் ரசிகர்கள்.!

திருமணத்திற்கு சம்மதம் - பேச்சிலர் பார்ட்டி

இதனையடுத்து, இவர்கள் இருவரின் திருமணமும் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தம்பி ராமையா பலருக்கும் பத்திரிக்கை வைத்து நேரில் வரவும் அழைப்பு விடுத்துள்ளார். அர்ஜுனின் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து நிச்சயமும் நடைபெற்று முடிந்தது. 

Actor arjun daughter

இன்னும் ஒரு வாரத்தில், ஜூன் 14 அன்று தம்பதிகளுக்கு திருமணம் நடைபெறவுள்ள நிலையில், ஐஸ்வர்யா தனது தங்கை மற்றும் தோழிகளுக்கு வெளிநாட்டில் பேச்சிலர் பார்ட்டி கொடுத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிகை ஷாலினி அஜித் குமார்; வைரல் கிளிக்ஸ் இதோ.!