ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இந்தியன் திரைப்படம்; திரையரங்கில் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்த கமல் ரசிகர்கள்.!Indian Movie Re Release at Kamala Cinemas Chennai Fans Celebration 

 

கடந்த 1996ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிலா, சுகன்யா, மனோரமா, கவுண்டமணி, செந்தில், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் இந்தியன்.  ஊழலுக்கு எதிராக, லஞ்சத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்யும் ஓய்வு பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரான சேனாபதியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

இந்தியன் ரீ-ரிலீஸ்

அன்றைய சமயத்திலேயே படம் மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இந்தியன் 2 படமும் தயாராகி அடுத்த மாதம் 12 ம் தேதி வெளியாகிறது. இதனால் கமல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் பரிசாக கிடைத்துள்ள நிலையில், ஜூன் 7ம் தேதியான இன்று சக்தி பிலிம் பேக்டரி சார்பில் படம் மீண்டும் தமிழ்நாட்டில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பிளாக்பஸ்டருக்கு தயாரா? ரீ ரிலீஸாகும் இந்தியன் திரைப்படம்.. இன்று டிரெய்லர் வெளியீடு..!!

சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் இந்தியன் படம் மறுவெளியீடு செய்யப்பட்டதைத்தொடர்ந்து, படத்தை கண்டு ரசித்த ரசிகர்கள் சேனாதிபதியின் காட்சி வந்தபோது படத்தை நிறுத்தி வைத்து பட்டாசு வெடித்து அதனை கொண்டாடி மகிழ்ந்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியன் 2 திரைப்படம்

ஷங்கர் இயக்கத்தில், நடிகர்கள் கமல் ஹாசன், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபி சிம்ஹா உட்பட பலரும் நடித்துள்ள திரைப்படம் இந்தியன் 2 (Indian 2). லைகா ப்ரொடக்சன் தயாரிப்பில், அனிரூத் இசையில் படம் உருவாகியுள்ளது. ஜூலை 12ம் தேதி படம் உலகளவில் பல மொழிகளில் திரையரங்கில் வெளியாகிறது. 

இதையும் படிங்க: Pithala Maathi Movie: ஜூன் 14ம் தேதி திரைக்கு வருகிறது பித்தல மாத்தி திரைப்படம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!