சூப்பர்.. அப்போ தாறுமாறுதான்! அட்லீ- ஷாருக்கான் கூட்டணியில் இணையும் மற்றுமொரு பிரபலம்!!

சூப்பர்.. அப்போ தாறுமாறுதான்! அட்லீ- ஷாருக்கான் கூட்டணியில் இணையும் மற்றுமொரு பிரபலம்!!


ar-rahman-going-to-join-with-atlee-and-shah-rukan-movie

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய அட்லீ  ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து அவர் தளபதி விஜய் நடிப்பில் தெறி படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டானது. 

அதனைத் தொடர்ந்து அட்லீ விஜய் நடிப்பில் மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியிருந்தார். அந்த படங்களும் செம ஹிட்டாகி வசூல் சாதனை படைத்தது. இந்த இரு படங்களுக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். அந்த பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து தாறுமாறாக ஹிட்டானது. மேலும் தற்போது வரை அப்பாடல்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். 

atlee

இந்தநிலையில் அட்லீ அடுத்ததாக பாலிவுட்டின் முன்னணி நடிகரான  ஷாருக்கான் நடிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்திற்குள் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அட்லீ மற்றும் ஷாருக்கான் இணையும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.