சினிமா

அப்பா இன்னும் மாறவேயில்லை! விழாமேடையில் நிற்கவைத்து ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் என்ன பேசினார் தெரியுமா?

Summary:

ar rahman daughter talk about her father

கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி  படம் ‘ஸ்லம்டாக் மில்லினியர்’. இந்த படத்தின்  இசைக்காகவும், பாடலுக்காகவும் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றார்.

மேலும் அப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் அதற்கான கொண்டாட்ட விழா மும்பை தாராவி பகுதியில் நடைபெற்றது.  அதில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மூத்த மகள் கதிஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் கதிஜா தனது தந்தை ஏஆர் ரஹ்மான் பற்றி பேசுகையில், எனது அப்பாவை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது. அதற்கு காரணம் அவரோட உலகப் புகழ் இல்ல. அவரது இசையில்லை. அப்பா எங்க மூன்று பேருக்கும் கற்பித்த நன்மதிப்புகள் தான். உங்கள் தன்னடக்கம் தான் எங்களை மிகவும் ஈர்க்கிறது. 

மேலும் அப்பா இரண்டு ஆஸ்கர் வாங்கி பத்து வருஷம் ஆகிவிட்டது. ஆனாலும் அவர் அதே ரஹ்மானாகத்தான் இருக்கார். அணு அளவும் மாறவில்லை. எங்கக் கூட அப்பா இருக்கும்  நேரம் மட்டுமே  குறைந்திருக்கு.

சினிமா மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் அப்பா சிறந்தவர்.மற்றவர்களுக்கு நிறைய உதவி செய்வார். அது மற்றவர்கள் கூறித்தான் எங்களுக்கு தெரியும். 

பின்னர், நாங்கள் எங்களோட வேலைகளுக்குப் போகப்போறோம், எங்களுக்கு நீங்கள் கொடுக்கிற அறிவுரை என்னவென்று கேட்டார். 

அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ,‘நான் யாருக்கும் அறிவுரை கூறமாட்டேன்.. எங்க அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்த அனைத்தையும் நான் உங்களுக்கு சொல்லித் தரவேண்டும் என மட்டுமே நினைத்தேன்.. உங்கள் மனசு சொல்வதை கேளுங்கள் உங்கள் மனசு தான் உங்களுக்கான சிறந்த வழிகாட்டி,கடவுள் உங்களை வழிநடத்துவார் என தெரிவித்தார்.


Advertisement